Enable Javscript for better performance
உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு: இலங்கை சிறையில் உள்ள  மீனவரை மீட்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு: இலங்கை சிறையில் உள்ள  மீனவரை மீட்க கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மண்டப பகுதியைச் சேர்ந்த மீனவரின் மகன் உடல் நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தார்.  அதனால் இலங்கை சிறையில் உள்ள அவரது தந்தையை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிறையில் உள்ள மீனவர் வந்தவுடன் தான் அவரது மகனின் இறுதிச் சடங்கை நடத்தப் போவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
      ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஜெயசீலன். இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன். 
       இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் ஜெயசீலன் உள்பட நான்கு மீனவர்களை ஒரு படகுடன் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். ஜெயசீலன் கைது செய்யப்பட்ட நாள் முதல் அவரது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்துடன், மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
      இந்நிலையில்,  ஜெசீலனின் மகன் ஸ்டீபன் (30) உடல் நலம் பாதிக்கப்பட்டு, புதன்கிழமை இரவு இறந்தார். இதனைத்தொடர்ந்து, இலங்கை சிறையில் உள்ள தந்தை ஜெயசீலன் மகனின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள மத்திய, மாநில அரசுகள் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், அதுவரையில் ஸ்டீபன் உடலை அடக்க செய்ய போவதில்லை எனவும் ஜெயசீலனின் உறவினர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai