Enable Javscript for better performance
ஊராட்சி நிர்வாகம் கைவிட்டதால் சொந்த நிதியில் புதிய குளியல் தொட்டி கட்டிய கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சி நிர்வாகம் கைவிட்டதால் சொந்த நிதியில் புதிய குளியல் தொட்டி கட்டிய கிராம மக்கள்

    By DIN  |   Published on : 09th February 2018 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி அருகே பராமரிப்பின்றி சேதமடைந்த குளியல் தொட்டியை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கிராம மக்களே நிதி திரட்டி புதிதாக குளியல் தொட்டி அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
        கமுதி அருகே கீழமுடிமன்னார்கோட்டையில்  400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக  2014-ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சத்தில்  போர்வெல் வசதியுடன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. 
    ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாமல், தொட்டி வீணடிக்கபட்டது.  தண்ணீர் விநியோகத்திற்கு அமைக்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கபட்டது.  இதனால் டேங்கர் லாரிகளில் வரும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் இந்த கிராம மக்கள்.மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக 2013-ல்  தலா ரூ. 50 ஆயிரத்தில் 3 குளியல் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், இவை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து, இடிந்துள்ளன. 
    இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால்,  கிராம மக்கள் ஒருங்கிணைந்து சொந்த நிதியை திரட்டி, குளியல் தொட்டி அமைத்து, குழாய் சேதத்தை சீரமைத்து பயன்படுத்தி வருகின்றனர். 
    இதுகுறித்து கீழமுடிமன்னார்கோட்டை அந்தோணி கூறியது:
        கிராமத்திற்கு தேவையான சாலை,  குடிநீர்,  தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை.  கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால்,  ஊராட்சி செயலரிடம் புகார் தெரிவிக்க கூறுகின்றனர்.  ஊராட்சி செயலரை சந்திப்பது இயலாத காரியமாக உள்ளது. தெருக்களில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் பராமரிக்காமல், குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
        மேலும் குடிநீர், குளியல் தொட்டிகளை பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் முன்வராததால், கிராம மக்கள் சொந்த நிதியை பயன்படுத்தி, பழுது பார்த்து, தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தவறிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai