Enable Javscript for better performance
செம்மொழி இலக்கிய சிந்தனை பயிலரங்கம் நாளை நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற பயிலரங்கம் சனிக்கிழமை நிறைவடைகிறது.  
        செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் கல்லூரி நிர்வாகம் இணைந்து இப்பயிலரங்கை கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறன.  தினமும் 4 அமர்வுகளாக நடைபெறும் இப்பயிலரங்கில் செம்மொழி இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அம்சங்கள் குறித்து பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் உரையாற்றி வருகின்றனர். இப்பயிலரங்கம் சனிக்கிழமை நிறைவுபெறுகிறது. நிறைவு நிகழ்ச்சியில் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முகிலை ராஜபாண்டியன் சிறப்புரையாற்றுகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிறைவுரையாற்றுகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai