Enable Javscript for better performance
தனுஷ்கோடி கடல் பகுதியில் குவியும் கடல் பறவைகள்- Dinamani

சுடச்சுட

    

    தனுஷ்கோடியில் கடல் பகுதியில் காணப்படும் கடல் பறவைகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
      ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில், அ ரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் கடல் பறவைகள் என்று அழைக்கப்படும் கடல்புறா, தின்னி உள்ளான், விறாரடிப்பான் உள்ளிட்ட பறவைகள் இன பெருக்கத்திற்காக ஜனவரி முதல் மார்ச் வரையில் அதிகளவில் தனுஷ்கோடி பகுதிக்கு வருகை தருகின்றன.  இதேபோன்று வெளிநாட்டு பறவைகளும் இங்கு வருகை தருகின்றன.
     இந்நிலையில், தனுஸ்கோடிக்கு முதல்கட்டமாக ஆயிரக்கணக்கான கடல்புறா, தின்னி உள்ளான், விறாரடிப்பான் உள்ளிட்ட பறவைகள் குவிந்து வருகிறது. தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரிச்சல்முனை செல்லும் சுற்றுலாப் பயனிகள் காரில் இருந்தபடியே பறவைகளை ரசித்து செல்லுகின்றனர். மேலும் இந்த பறவைகளை மர்ம நபர்கள் வேட்டையடுவதை தடுக்க வனத்துறையினர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai