Enable Javscript for better performance
திருவாடானை அருகே மின் கம்பங்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் பல மாதங்களாக ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழந்து வருவதாக புகார் தெரிவித்தனர்.
    திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் தர்மலிங்கம் வீட்டின் அருகே அடுத்தடுத்த இரண்டு மின்கம்பங்கள் சேதம் அடைந்து முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.இது குறித்து பல தடவை சம்பந்த பட்ட துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் இப்பகுதி மக்கள் தெருவில் நடந்து செல்வதற்கே  அச்சபடுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai