Enable Javscript for better performance
பரமக்குடியில் பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடியில் பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடியில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் நகைகளை பறித்துச் சென்ற பட்டதாரி இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
       எமனேசுவரம் காவல் சரகத்திற்குட்பட்ட மஞ்சள்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் மனைவி ராஜம்மாள் (45). இவர் வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் திருநாவுக்கரசு (22) என்ற பட்டதாரி இளைஞர்.  
      ராஜம்மாள் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த கேபிள் வயரினால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். பின்பு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார்.
        இதுகுறித்து ராஜம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தப்பியோடிய திருநாவுக்கரசை வளையனேந்தல் பகுதியில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அதில் நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக பணம் இல்லாததால் ராஜம்மாளிடம் நகையை பறித்து சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸார் வழக்குப் பதிந்து 
    திருநாவுக்கரசிடம் இருந்து நகையை மீட்டு, அவரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai