Enable Javscript for better performance
பராமரிப்பின்றி உள்ள சிறுபாலத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பராமரிப்பின்றி உள்ள சிறுபாலத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அபிராமம் அருகே பரளையாற்றிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் வெளியேறும் வகையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறுபாலம் பராமரிப்பின்றி உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.
       குண்டாறு,  கிருதுமால் நதியிலிருந்து வெளியேறும் தண்ணீரால் உருவான பரளையாற்றின் மூலம் அபிராமம்,  மணலூர்,  கீழக்குளம்,  ஆணைசேரி, மேலக்கன்னிசேரி உட்பட 30-க்கும் மேற்பட்ட கிராம கண்மாய்கள் பயனடைந்து வருகின்றன.
       பரளையாற்றிலிருந்து கண்மாய்களுக்கு செல்லும் வகையில் சாலையின் குறுக்கே அமைக்கபட்ட சிறுபாலங்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளன.
      கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவ மழையால் பரளையாற்றிற்கு புறம்போக்கு,  சாலையோரங்களிலிருந்து வந்து சேர்ந்த மழைநீரை கண்மாய்களுக்கு கொண்டு செல்ல முடியாமல்,  ஆங்காங்கே தேங்கி தண்ணீர் வீணானது. ஆற்று நீரை  கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் வகையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறுபாலங்களில் உள்ள மடைகளை சீரமைத்து,  செடிகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai