Enable Javscript for better performance
பாம்பன் தூக்குபாலத்தை கடந்த சென்ற 7 ஆழ்கடல் மீன்பிடி படகுகள்- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் தூக்குபாலத்தை கடந்த சென்ற 7 ஆழ்கடல் மீன்பிடி படகுகள்

    By DIN  |   Published on : 09th February 2018 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் இருந்து வந்த 7 ஆழ்கடலம் மீன்பிடி படகுகள் பாம்பன்  ரயில் தூக்கு பாலத்தை வியாழக்கிழமை கடந்து நாகை சென்றன.  ஒரேநேரத்தில் ஓன்றின் பின் ஒன்றாக 7 படகுகள் பாலத்தை கடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். 
      ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் தரவைக்குளம் பகுதியிலிருந்து 7-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வந்தன. இந்த படகுகள் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை 
    கடந்து  நாகை செல்ல பாம்பன் துறைமுக அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. 
    இதனையேற்று வியாழக்கிழமை அனுமதி கிடைத்தவுடன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து படகுகள் நாகைக்கு சென்றன.  தூக்கு பாலம் திறக்கப்பட்டு படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai