Enable Javscript for better performance
பார்த்திபனூர் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்;  ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பார்த்திபனூர் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்;  ஓட்டுநர் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனர்.
       பார்த்திபனூர் காவல் சரகத்துக்குட்பட்ட அழகன்பச்சேரி விளக்குச் சாலையில் ஆய்வாளர் ராஜா உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார்,  நாகநாதன் மற்றும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக மணல் கடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது.
       இதுகுறித்து பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததுடன்,  லாரி ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம் மூஞ்சியூரணி கிராமத்தைச் சேர்ந்த சிங்கத்துரை (45) என்பவரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai