Enable Javscript for better performance
முதுகுளத்தூரில் 2 இடங்களில் பூங்கா அமைக்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூரில் 2 இடங்களில் பூங்கா அமைக்க நடவடிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூரில் சுற்றுப்புற சூழலை  பாதுகாக்கும் நோக்கில் 2 இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி தெரிவித்தார்.
       அவர் கூறியதாவது: முதுகுளத்தூரில் அரசு புறம்போக்கு நிலங்கள் போதுமானதாக இருந்தும், சிறுவர் விளையாட்டு பூங்கா, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. 
    இதனால் முதுகுளத்தூர் பிரதான கடைவீதியில் 2 பூங்காக்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யபட்டுள்ளது. அந்த இடங்களை மையப்படுத்தி மாவட்ட நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டுள்ளோம். 
    அனுமதி பெற்றவுடன் 2 பூங்காக்களும் அமைக்கப்படும். அதேபோல் சேதமடைந்துள்ள சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai