Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் திடீர் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் திடீர் தர்னா

    By DIN  |   Published on : 09th February 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடல் வளத்தை அழிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாகவும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகவும் கூறி நாட்டுப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல்வளம் அழிந்து வருகிறது. கடற்கரையோரங்களில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என்ற விதிமுறையை மீறி மீன்பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் அப்பகுதிகளில் விரித்து வைத்துள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி விடுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விசைப்படகு மீனவர்களுக்கு உடந்தையாக மீன்வளத் துறை அதிகாரிகள் செயல்படுவதாகவும் இதனால் கடல் வளம் முற்றிலும் அழிந்து விட்டதாகவும் நாட்டுப்படகு மீனவர்கள் கூறி வந்தனர்.
       விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில் இருதரப்பினரையும் அழைத்து பேசுவது என மீன்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து அதன்படி வியாழக்கிழமை மீன்வளத்துறை அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
      இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.முதலில் விசைப்படகு மீனவர்களை அழைத்துப் பேசி விட்டு அதன் பின்னர் நாட்டுப்படகு மீனவர்களை அழைத்துப் பேசுவதாக கூறியிருந்தனர். ஆனால், நாட்டுப்படகு மீனவர்களிடம் கூட்டம் ஒரு வாரத்துக்கு பிறகு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால்,  மீன்வளத் துறை அலுவலகம் முன்பு நாட்டுப்படகு மீனவர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
       தகவலறிந்து மீன்வளத்துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் நாட்டுப்படகு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளிக்கிழமை மதியம் 4 மணிக்கு ஒரு நிரந்தர முடிவு எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai