Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் மளிகைக் கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் மளிகைக் கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளி மீட்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் பணியாற்றி வந்த 12 வயது  சிறுவனை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர். 
       ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 13-வது தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் பாண்டி. இவரது கடையில் ராமநாதபுரம் அருகே செவ்வூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜூ என்பவரது மகன் கனிதீபன் (12) பணி செய்து வருவதாக ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது.
       இத்தகவலின் பேரில் சைல்டு லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி எஸ். துரைமுருகன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் ஜி. விஸ்வநாதன்,  உதவி ஆய்வாளர்கள் புஷ்பராஜ், கதிரவன், மனித வர்த்தக கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட மளிகைக் கடைக்கு சென்று அங்கு கடையில் இருந்த சிறுவன் கனி தீபனை மீட்டனர்.
      பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி எஸ். துரைமுருகன்,  எந்த வர்த்தக நிறுவனமும் சிறுவர்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்று மளிகைக் கடை உரிமையாளர் பாண்டிக்கு அறிவுரை வழங்கினார். 
     பின்னர் சிறுவனை குழந்தைகள் பாதுகாப்பு நல குழுவினரிடம் ஒப்படைத்து,  அவன் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai