சுடச்சுட

    

    ராமநாதபுரம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார். மேலும், இருவர் காயமடைந்தனர்.
     ராமநாதபுரம் பாசிப்பட்டறைத் தெரு ஹாஜா மைதீன் மகன் பகாத்அலி (34). ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவில் ராமநாதபுரம் நாகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் சுரேஷ் (37), செய்யது இப்ராஹிம் மகன் ஆஷிக் ரகுமான் (30) ஆகியோர் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி சென்றுள்ளனர்.
      சக்கரக்கோட்டை பகுதியில் கழுங்கு முனியசாமி கோயில் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது மோதியது. 
    இதில், பகாத்அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  பலத்த காயமடைந்த சுரேஷ், ஆஷிக் ரகுமான் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை 
    பெற்று வருகின்றனர்.
     இதுதொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப்பதிந்து, டிப்பர் லாரி ஓட்டுநரான ராமநாதபுரம் அருகே உள்ள பாலக்கரை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் அஜித்குமாரை (24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai