Enable Javscript for better performance
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடியது- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றதால் மீன்பிடித் துறைமுகம் சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுள் உள்ளன. கடந்த வியாழக்கிழமை  நள்ளிரவு மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தது.
    இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாலை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் 99 சதவீதம் விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதனால் துறைமுகத்தில் ஒரு சில படகுகள் மட்டுமே இருந்ததால், துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    60 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை மீனவர்கள் கரை திரும்பிய பிறகே பிடிபட்ட மீன்கள் குறித்த நிலவரம் தெரியவரும் என மீனவ சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai