Enable Javscript for better performance
கமுதியில் மகனின் தவறான நடத்தையால் தாய் தீக்குளித்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    கமுதியில் மகனின் தவறான நடத்தையால் தாய் தீக்குளித்து சாவு

    By DIN  |   Published on : 24th March 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதியில் மகன் தனது சொல்லை கேட்காமல் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி சுமதி (30). இவருக்கும், கணவர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு அரவிந்த் (13) என்ற மகன் உள்ளார். அரவிந்த், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து பல தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    இதனை அறிந்த சுமதி பலமுறை மகனைக் கண்டித்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் அரவிந்தை பலமுறை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி தாய் சுமதிக்கும், அரவிந்துக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அரவிந்தை அச்சுறுத்துவதற்காக சுமதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி மிரட்டியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக தீப் பற்றியதில், சுமதியின் உடலில் 50 சதவீதத்துக்கு மேல் தீக் காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி சுமதி உயிரிழந்தார். இது குறித்து சுமதியின் சகோதரர் பாண்டியராஜன் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai