Enable Javscript for better performance
கமுதி அருகே டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கமுதி அருகே வியாழக்கிழமை அதிக பாரம் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழி அருகே தென்சலையாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச் செட்டியார் மகன் கருப்பசாமி (39). இவர் தனது டிராக்டரில் கரிமூட்டத் தொழிலுக்காக அளவுக்கு அதிகமான கருவேல மர விறகுகளை ஏற்றி வந்துள்ளார். டி.எம்.கோட்டை வளைவு சாலையில் திரும்பும்போது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், கருப்பசாமி தன் உயிரைக் காப்பற்றிக் கொள்ள டிராக்டரில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளார். ஆனால், டிராக்டர் அவர் மீது கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக, அவரை கமுதி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கருப்பசாமி மனைவி முத்துலெட்சுமி பெருநாழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    அதன்பேரில், பெருநாழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai