Enable Javscript for better performance
கமுதி கோயில்களில் களைகட்டியது பங்குனி பொங்கல் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கமுதி கோயில்களில் களைகட்டியது பங்குனி பொங்கல் திருவிழா

    By DIN  |   Published on : 24th March 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் பங்குனிப் பொங்கல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.
    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி குண்டாற்றுக் கரையில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில், நாடார் பஜாரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், தெற்குத் தெருவில் உள்ள காளியம்மன் கோயில், கமுதி கண்ணார்பட்டியில் உள்ள தாண்டவ சடச்சியம்மன் கோயில், ஆதி திராவிடர் தெருவில் உள்ள இருளாயி அம்மன் கோயில், சிங்கப்புளியாபட்டியில் உள்ள காளியம்மன் கோயில், வெள்ளையாபுரம் காளியம்மன் கோயில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் பங்குனிப் பொங்கல் திருவிழா புதன்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இக் கோயில்களின் மூலவருக்கு தினமும் காலை, இரவு சிறப்புப் பூஜைகள் நடத்தி, பஞ்சபூத வாகனங்களில் வீதி உலா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, இப்பகுதியில் உள்ள கோயில்களில் தினசரி இரவு சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். கமுதி உதவிக் காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், ஏராளமான போலீஸார், கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்தந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீஸார் கண்காணித்து வருவதாக, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai