Enable Javscript for better performance
சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தரமான உணவுப்பொருள்களை வழங்குமாறு வணிகர்களிடம் உணவு பாதுகாப்பு அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்.
    ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் பாதுகாப்பான உணவு தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வணிகர்கள் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ராமேசுவரம் வணிகர்கள் சங்கத் தலைவர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் உ.பாண்டி முன்னிலை வகித்தார். இதில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மு.கருணாநிதி பேசுகையில், ராமேசுவரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு உணவு நிறுவனங்களில் தரமான உணவுகள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மீனவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் தரமற்ற உணவுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தால் அவர்களது உடல் நிலை பாதிப்கப்படும். அதில் உணவக ஊழியர்களன் உறவினர்கள், குடும்பத்தினரும் இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு தரமான உணவுப் பொருள்களை தயாரித்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கருத்தரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க துணைத்தலைவர் தில்லைபாக்கியம், நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் செய்யது அக்ஸன், பொருளாளர் ஹ.சியாமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai