Enable Javscript for better performance
தபால்தலை சேகரிக்கும் போட்டி: ராமநாதபுரம் மாணவருக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    தபால்தலை சேகரிக்கும் போட்டி: ராமநாதபுரம் மாணவருக்கு பரிசு

    By DIN  |   Published on : 24th March 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தபால்தலை சேகரிக்கும் சென்னை மண்டல அளவிலான போட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர் எம்.பிரணவ செந்தூரான் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அஞ்சல்துறை அதிகாரிகள் பலரும் வியாழக்கிழமை வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் பகுதி மேலவலசை கிராமத்தினை சேர்ந்த எம்.முருகனின் மகன் எம்.பிரணவ செந்தூரான்(11). இவர் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். அஞ்சல்துறையின் சார்பில் சென்னை மண்டல அளவில் நடைபெற்ற தபால்தலைகளை சேகரிப்போரை ஊக்குவிப்போருக்கான போட்டியில் எம்.பிரணவ செந்தூரான் கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கான பரிசினை வென்றார்.
    இது குறித்து ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என்.ஜெ.உதயசிங், மாணவர் எம்.பிரணவ செந்தூரானை பாராட்டினார். அவர் கூறியது:
    அஞ்சல் துறையானது தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 'தீன்தயாள் ஸபார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்' என்ற போட்டியை பள்ளி மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இப்போட்டியானது சென்னை மண்டல அளவில் நடைபெற்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 40 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் ராமநாதபுரத்தில் இருந்து மாணவர் எம்.பிரணவ செந்தூரான் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு பெற்றார். இவருக்கு அதற்கான சான்றிதழையும், ரொக்கப்பரிசு ரூ.6 ஆயிரத்தையும் தமிழக முதன்மை அஞ்சல்துறையின் தலைவர் சம்பத் வழங்கி பாராட்டினார். பிரணவ செந்தூரான் சுற்றுலா தலங்கள் தொடர்பான தபால் தலைகளை சேகரித்திருந்தார் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது அஞ்சல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளர் விஜயகோமதியும் உடன் இருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai