Enable Javscript for better performance
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 24th March 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழாவின் 1-ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    ஆயிர வைசிய சமூகத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயில் பங்குனித் திருவிழா,வியாழக்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, 1-ஆம் நாளான வெளளிக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
    இரவு பூதகி வாகனத்தில் அம்பாள் புறப்பாடாகி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் தேங்காய், பழங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாட்டினை, ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் பா. ஜெயராமன் செட்டியார், வா. ரவீந்திரன் செட்டியார், மானேஜிங் டிரஸ்டி சோ. பாலசுப்பிரமணியன் செட்டியார் மற்றும் ஆயிர வைசிய சபைத் தலைவர் எஸ். பாலுச்சாமி தலைமையிலான சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai