Enable Javscript for better performance
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கமுதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை புதன்கிழமை அபிராமம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பகுதியில் அனுமதியின்றி மணல் ஆற்றுப் பகுதிகளில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக அபிராமம் போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அபிராமம் தீர்த்த அச்சங்குளம் கிருதுமால் நதி பகுதியில் போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி, மணல் அள்ளி வந்தது தெறிய வந்தது. இதனை அடுத்து லாரி ஓட்டுநரான அபிராமம் மணிநகரத்தை சேர்ந்த பாலமுருகன் மீது அபிராமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் லாரியை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக பரமக்குடி சார்- ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai