Enable Javscript for better performance
ராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோ. கீதா தலைமை வகித்தார்.
    விழாவில், 337 மாணவியருக்கு பட்டங்களை வழங்கி சின்னத்துரை அப்துல்லா பேசினார். விழாவில், இளங்கலை பட்டப் படிப்பில் தமிழ் பிரிவில் மீனலோசினி என்ற மாணவியும், மின்னணுவியல் படிப்பில் அஜிதா பாத்திமா என்ற மாணவியும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றமைக்காக தங்கப் பதக்கமும், அதற்கான சான்றிதழையும் பெற்றனர். மாணவியர்களில் 11 பேர், அழகப்பா பல்கலை. அளவில் 6 மற்றும் 7 ஆம் இடங்களை பெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai