Enable Javscript for better performance
இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 19 பேருக்கு ஏப்.13 வரை காவல் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 19 பேருக்கு ஏப்.13 வரை காவல் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் மீனவர்கள் 19 பேருக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
            ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 19 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது படகுகளையும் சிறைப்பிடித்தனர். பின்னர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வவுனியா சிறையில் அடைத்தனர். 
         இந்த 19 மீனவர்களின் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி ஹயஸ்பல்டோனா விசாரணை மேற்கொண்டு, மீண்டும் இவர்களின் காவலை ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்பேரில், மீனவர்கள் 19 பேரும் வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai