Enable Javscript for better performance
கமுதி அருகே விவசாயி கைது- Dinamani

சுடச்சுட

    

    கமுதி அருகே நெருஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி முனியம்மாள் (47). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி சிவன் மகன் ஜீவராஜ் (58) என்பவருக்கும் நிலப் பிரச்னைகாரமணாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில், வியாழக்கிழமை முனியம்மாளின் நிலத்தை ஜீவராஜ் ஆக்கிரமித்துக் கொண்டதால், ஆத்திரமடைந்த முனியம்மாள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஜீவராஜ் தன் கையில் வைத்திருந்த கட்டையால் முனியம்மாளை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முனியம்மாள் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.    
    இது குறித்து முனியம்மாள் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் ஜீவராஜ் மீது வன்கொடுமைச் சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai