Enable Javscript for better performance
திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயில் தேரோட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
           ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஆதிஜெகன்னாதப் பெருமாள் திருக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி, நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தார். மார்ச் 25 ஆம் தேதி ஆதிஜெகன்னாதப் பெருமாளும், பட்டாபிராம சுவாமியும் தனித்தனியாக கருட வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
         மார்ச் 27 இல் ஆதிஜெகன்னாதப் பெருமாளுக்கும், ஸ்ரீ பத்மாஸனி தாயாருக்கும் மாலை மாற்றல் வைபவத்தை தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
        தொடர்ந்து, ஆதிஜெகன்னாத பெருமாளும், பத்மாஸனி தாயாரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் ரத வீதிகளில் பவனி வந்தனர். தேரோட்ட விழாவில், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் வி. மகேந்திரன், செயல் அலுவலர் எம். ராமு, கோயில் கண்காணிப்பாளர் ஜி. கண்ணன் உள்பட பலரும் கலந்துகொண்டனர். மார்ச் 31 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆதிஜெகன்னாதப் பெருமாளும்,  பட்டாபிராமசுவாமியும்கருட வாகனங்களில்  சேதுக்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தமாடும்  நிகழ்ச்சியும்  நடைபெறுகிறது. 
         ஏப்ரல் 1-ஆம் தேதி பெருமாள் வானமாமலை மடத்துக்கு எழுந்தருளும்  நிகழ்ச்சியும், ஏப்ரல் 6 ஆம்  தேதி உற்சவ சாந்தியுடனும் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான  ஏற்பாடுகளை, ராமநாதபுரம்  சமஸ்தானத்தின் நிர்வாகிகள்  செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai