Enable Javscript for better performance
பங்குனி உத்திரம்: ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திரம்: ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி

    By DIN  |   Published on : 31st March 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிக்கிழமை பால் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி எடுத்து வந்தனர். 
    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மேலவாசல் பகுதியிலுள்ள பாலசுப்பிரமணிய ஆலயத்தின் 56 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா, யாத்திரை பயணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், கரையூர், என்.எஸ்.கே. வீதி, ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, வேல் காவடி, பறவைக் காவடி, ஓம் காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை எடுத்த வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
         பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, யாழ்திரைப் பணியாளர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மகேஷ், தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai