Enable Javscript for better performance
மின் துண்டிப்பால் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஊராட்சி செயலர் மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

    மின் துண்டிப்பால் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஊராட்சி செயலர் மீது புகார்

    By DIN  |   Published on : 31st March 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி அருகே குடிநீருக்காக அமைக்கப்பட்ட  மின் இணைப்பை ஊராட்சி செயலர் துண்டித்ததால், ஆழ்துளை கிணறு காட்சி பொருளாக  இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
     ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள நீராவி ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பில் 2013-2014-ம் ஆண்டு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக  மின் இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.   இந்நிலையில் கடந்த 1 மாத காலமாக ஆழ்துளை கிணற்றுக்காக அமைக்கப்பட்ட மின் பெட்டியில் உள்ள மின்சார அமைப்புகளை ஊராட்சி செயலர் எவ்வித அறிவிப்பும் இன்றி அகற்றிவிட்டதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர்.  மேலும் குடிநீருக்காக தற்போது அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.   எனவே மாவட்ட நிர்வாகம் ,  ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai