Enable Javscript for better performance
முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள்- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள்

    By DIN  |   Published on : 31st March 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் பேருந்து நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்துகள் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
      முதுகுளத்தூர் பேருந்து நிலைய வளாகத்திற்குள் தனியார் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை என போலீஸார் எச்சரித்தும்,  பேருந்து நிலைய வளாகத்திற்குள்  இரு சக்கர வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். 
     பேருந்து நிலைய நுழைவுவாயில், புறக்காவல் நிலையம்,  வெளியூர்களுக்கு பேருந்துகள் செல்லும் இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அரசு, தனியார் பேருந்துகள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பஜார் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai