Enable Javscript for better performance
ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 27 பேர் மற்றும் 184 விசைப்படகுகளை விடுவிக்க, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரத்தில் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது.
    தற்போது, அந்நாட்டுச் சிறைகளில் உள்ள 27 மீனவர்கள் வெள்ளிக்கிழமையன்று விடுதலை செய்யப்படவில்லை.     மேலும், இலங்கைத் துறைமுகங்களில் பாதுகாப்பற்ற நிலையில் சேதமடைந்து வரும் 184 விசைப் படகுகளும் விடுவிக்கப்படாமல் உள்ளன. 
     இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற மீனவ சங்கக் கூட்டத்தில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai