Enable Javscript for better performance
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை தென்மண்டல ஐ.ஜி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை தென்மண்டல ஐ.ஜி ஆய்வு

    By DIN  |   Published on : 31st March 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் வரும் ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐ.ஜி. எஸ்.பி. பாரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
          ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பயணிகள் வருகின்றனர். 
    இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பயணிகள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ரயில்வே இருப்புப் பாதை தென்மண்டல ஐ.ஜி. எஸ்.பி. பாரி வெள்ளிக்கிழமை வந்து ஆய்வு மேற்கொண்டார். 
    மேலும், பயணிகளிடம் பெறப்பபட்ட புகார்கள் அடிப்படையில் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன, எத்தனை புகார்கள் வந்துள்ளன என, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.    இந்த ஆய்வின்போது,  மதுரை கோட்டப் பாதுகாப்பு அதிகாரி முகைதீன், இருப்புப் பாதை காவல் துறைக் கண்காணிப்பாளர் செளந்தரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 
    பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. 
    வரும் காலங்களில் இந்த கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai