Enable Javscript for better performance
அஞ்சுகோட்டையில் ஜகத் ஜனனி அம்மன் கோயில் பால்குட விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் உள்ள ஜகத் ஜனனி அம்மன் கோயில் பால்குட விழா புதன்கிழமை நடைபெற்றது. 
      இக்கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. 
            ஐந்தாம் நாளான புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், அஞ்சுகோட்டை கருப்பணசுவாமி கோயிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மன் கோயிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
        இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தில் இருந்து  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரினம் செய்தனர். 
     பின்னர், தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai