Enable Javscript for better performance
அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கமுதி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களுக்கு சதீஷ்(20) என்ற மகன் உள்ளார். நிறைகுளத்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 
    இதன் பின்னர் இவரது மனைவி மாரீஸ்வரிக்கும், அதே ஊரை சேர்ந்த செந்திலுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதனை சதீஷ் பலமுறை கண்டித்துள்ளார். இருந்த போதும் இருவரும் தொடர்பை துண்டிக்கவில்லை. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஊரில் நடந்த திருவிழாவுக்கு வந்த செந்திலை, தனது நண்பர்கள் இருவர் உதவியுடன்அரிவாளால் சரமாரியாக சதீஷ் வெட்டினார்.  
    தலையில் படுகாயமடைந்த செந்தில் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இந்நிலையில் சதீஷ் புதன்கிழமை மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து கோவிலாங்குளம் போலீஸார் சதீஷ் மீதுள்ள கொலை முயற்சி வழக்கை , கொலை வழக்காக மாற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai