Enable Javscript for better performance
கமுதி அருகே ஆற்றில் மணல் திருட்டு: டிப்பர் லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கமுதி அருகே ஆற்றில் மணல் திருட்டு: டிப்பர் லாரி பறிமுதல்

    By DIN  |   Published on : 18th May 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்பயன்படுத்தப்பட்ட  டிப்பர் லாரியை புதன்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் அருகே வீரசோழன் விலக்கு சாலை பகுதி குண்டாற்றில் நள்ளிரவில் டிப்பர் லாரியில் மணல் கடத்தப்படுவதாக, கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றனர். அப்போது போலீஸாரைக் கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் டிப்பர் லாரியை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து அந்த லாரியை மண்டலமாணிக்கம் போலீஸார் கைப்பற்றி கமுதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai