Enable Javscript for better performance
கமுதி அருகே குதிரை வண்டிப் பந்தயம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் திருவிழாவையொட்டி குதிரை வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     கோவிலாங்குளம் கிராமத்தில் மொட்டை இருளப்பசாமி கோயில் 78 ஆம் ஆண்டு முந்திரி எடுப்பு விழாவையொட்டி இக்குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய, சின்ன குதிரை வண்டி  என மொத்தம் 11 குதிரை வண்டிகள் பங்கேற்றன.
     கோவிலாங்குளம்- கமுதி சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.  இதில் ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குதிரை வண்டி பந்தய வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் முதல் 3 இடங்களை பெற்று வெற்றி பெற்ற குதிரை வண்டிப் பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம், குத்துவிளக்கு, செல்லிடப்பேசிகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இக்குதிரை வண்டிப் பந்தயத்தை காண கமுதி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai