Enable Javscript for better performance
தூய்மை பாரத இயக்கத் திட்ட விழிப்புணர்வு பணிகள்: கல்லூரி முதல்வர்களுடன் ஆட்சியர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    தூய்மை பாரத இயக்கத் திட்ட விழிப்புணர்வு பணிகள்: கல்லூரி முதல்வர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

    By DIN  |   Published on : 18th May 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடன் ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
    இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:
             தூய்மை பாரத இயக்ககத் திட்டத்தின் கீழ் குடிநீர் சிக்கனம், சுத்தம்,  சுகாதாரம், கழிப்பறை பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவை குறித்த பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளை கல்லூரி மாணவ, மாணவியர் பங்களிப்புடன் நடத்தப்பட வேண்டும். இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 115 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். இதனடிப் படையில்       தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும், தன்னார்வலர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. அப்பயிற்சியை   முடித்தவர்கள் மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப் பட்டுள்ளது. விழிப்புணர்வுப் பணிகளில் மாணவர்களை ஊக்குவித்திடும் வகையில் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
                 எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டும், மாணவர்களை ஊக்கப்படுத்தியும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
           ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஹென்சி.லீமா அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் ப.விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, உதவி ஆட்சியர் (பயிற்சி)பி.மணிராஜ் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai