Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.அகிலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்,  பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  
    இதில் மாநில இணைச் செயலாளர் கார்த்தீஸ்வரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் சுல்த்தான் ராஜா(ராமநாதபுரம்) ரகு (பரமக்குடி) உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai