Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் வாரச்சந்தை மற்றும் கேணிக்கரை பகுதியில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை, 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ.7,500 அபராதமும் வசூலித்தனர்.
     ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சோ.பார்த்தசாரதி தலைமையில் சுகாதார அலுவலர் ஆ.இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் வி.ஹரிதாஸ், மாறன், ஜெகதீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாரச்சந்தை, கேணிக்கரை பகுதிகளில் புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். இதில், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் 100 கிலோ அளவுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவற்றை பறிமுதல் செய்ததுடன், சம்மந்தப்பட்ட வர்த்தகர்களிடமிருந்து ரூ.7,500 அபராதத்தொகை வசூலித்தனர்.
       ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வாரச்சந்தையிலும், நகரின் பல்வேறு இடங்களிலும் இதே போல் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் நகராட்சி ஆணையாளர் சோ.பார்த்தசாரதி  கேட்டுக் கொண்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai