Enable Javscript for better performance
ராமநாதபுரம் மாவட்டத்தில் பால் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பால் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 18th May 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறிய அளவிலான பால்பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எஸ்.நடராஜன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
    இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறிய அளவிலான பால்பண்ணைகள் அமைக்கும் திட்டத்திற்கு 3 இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு பயனாளிகளை தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்கள் தொடக்க நிலையிலான முதலீடு செய்யும் நிலையில் உள்ளவர்கள் மற்றும் வங்கி பரிமாற்ற வசதி உள்ளவர்கள் ஆகியோருக்கு ஒரு இலக்கிற்கான திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் ஆகும். இதற்கு அரசு மானியம் 25 சதவிகிதம் ஆகும். ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான குழுவினால் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகள் இறுதி செய்யப்படவுள்ளனர். 
     பயனாளிகள் 300 சதுர அடி நிலம் சொந்தமாக அல்லது குத்தகையாக வைத்திருத்தல் வேண்டும், பயனாளி தீவன உற்பத்திக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக அல்லது குத்தகையாக வைத்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு கிராம பஞ்சாயத்தில் நிரந்தர முகவரிதாரரக இருக்க வேண்டும். 
    கால்நடை பராமரிப்புத்துறையின் வேறு எந்த திட்டத்திலும் பயன் பெற்றிருக்கக்கூடாது.  தற்போது பசு, எருமை மாடு சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. பயனாளிகள் மத்திய, மாநில அரசுகளில் பணிபுரிபவர்களாகவோ அல்லது அவர்களது உறவினர்களாகவோ இருத்தல் கூடாது.
    இவ்வரையறையின்படி தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்களிடம் இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
    விண்ணப்பதாரர் பெயர், இனம், வயது, முகவரி, ஆதார் எண், தொடர்பு எண் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும், இரு பாஸ்போட் சைஸ் புகைப்படங்கள், முகவரிக்கான ஆதாரம், ஆளறிவதற்கான ஆதாரம், வங்கிக் கணக்கு வைத்திருப்பதற்கான ஆதாரம் ஆகியவற்றைக் கொண்டதாக அவ்விண்ணப்பம் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai