Enable Javscript for better performance
வாயில் கருப்புத்துணியைக் கட்டி கர்நாடக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வாயில் கருப்புத்துணியைக் கட்டி கர்நாடக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அரண்மனை முன்பாக கர்நாடக ஆளுநரைக் கண்டித்து வாயில் கருப்புத்துணியைக் கட்டிக் கொண்டு வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைத்ததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக ஆளுநரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எம்.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் ஜோதிபாலன், மேகநாதன், சேதுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இலக்கிய அணியின் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் சேமனூர்.ராஜேந்திரன், மாவட்ட சேவாதளத் தலைவர் காருகுடி.சேகர், காவனூர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் வாயில் கருப்புத்துணியை கட்டியிருந்தனர். சிலர் கருப்புப் பட்டை அணிந்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai