ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாஜக பூத் கமிட்டி கூட்டம் வெள்ளிக்கிழமை ராமேசுவரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் கார்மேகம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆகில பாரத விவசாய அணி செயற்றுகுழு உறுப்பினர் திருமலைச்சாமி, மாநில துணைத்தலைவர் சுப.நாகராஜன், ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.