பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் காவல்துறை, நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
 நகர் பகுதியில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஓட்டப்பாலம் பகுதியிலிருந்து கிழக்கே பொதுப்பணித்துறை அலுவலகம் வரை வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பேக்கரி டீக்கடைகள், பூக்கடை மற்றும் தெருவோர பழக்கடை ஆகியவை நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்தன. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதன் பேரில் பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஸ்குமார், வட்டாட்சியர் என்.பரமசிவம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ்.வரதராஜன் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஐந்துமுனை சந்திப்பில் தொடங்கி கிழக்குப்பகுதி பொதுப்பணித்துறை அலுவலகம் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,  மீண்டும் இந்த ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com