மோர்ப்பண்ணை கிராமத்தில்  சிறப்பு கிராம சபைக் கூட்டம் 

திருவாடானை அருகே மோர்ப்பண்ணை கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ்  தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகே மோர்ப்பண்ணை கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ்  தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கிராம தலைவர் துரை பாலன் செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பப்பட்டது. அதனை தொடர்ந்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். 
அதில் இக்கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இப்பகுதி மக்கள் அனைவரும் மீன் பிடி தொழில் செய்து வருகின்றோம். இப்பகுதியில் அடிப்படை தேவையான குடிநீருக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் இப்பகுதி மக்களுக்கு இது போதுமானதாக இல்லை. இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதியில் சுமார் 1,500 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கும் என சான்று அளித்துள்ளனர். எனவே இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர்.
இக்கூட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள்,  கிராம பொது மக்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com