"தேவிபட்டினத்தில் பக்தர்களிடம் புரோகிதர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை'

தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரைக் கோயிலில் பக்தர்களிடம், புரோகிதர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும்

தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரைக் கோயிலில் பக்தர்களிடம், புரோகிதர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர் வி.கே.பழனிவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
 தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரைக் கோயிலில் பக்தர்களிடம் கிரகதோஷ பரிகாரங்கள் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, தேவிபட்டினத்தில் உள்ள கடலடைத்த பெருமாள் கோயிலில் புரோகிதர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பக்தர்களிடம் புரோகிதர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. முறையாக பயிற்சி பெற்றிருக்கும் புரோகிதர்களுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவிபட்டினத்தில்  உள்ள சக்கர தீர்த்தக்குளத்தை விரைவில் தூய்மைப்படுத்தும் பணிகளை செய்ய அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உள்பட்ட எந்தக் கோயிலாக இருந்தாலும் புகார்கள் இருப்பின் சமஸ்தான அலுவலகத்துக்கு தெரிவித்தால், உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 பேட்டியின்போது, சமஸ்தான செயல் அலுவலர் எம்.ராமு, கண்காணிப்பாளர் ஜி.கண்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com