இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 8 பேருக்கு 4-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கும், இலங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 4-ஆவது


எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கும், இலங்கை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 4-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தெற்குகரையூர் பகுதியில் இருந்து ஜூலை 16 ஆம் தேதி தெர்மாகூல் படகில் மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் 8 பேர் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்குப் பதிவு செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நான்காவது முறையாக 8 மீனவர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரக அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால் 8 மீனவர்களையும் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து அவர்கள், மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மீனவர்களை விடுவிக்க எவ்வித நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் வேதனையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com