தொண்டி பகுதியில் மீன் விலை அதிகரிப்பு

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதியில் கடந்த சில நாள்களாக மீன் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வியாபரிகள் கவலை அடைந்துள்ளனர்.


திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதியில் கடந்த சில நாள்களாக மீன் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வியாபரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டணம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் பிடிபடும் மீன்கள் அதிக ருசியாக இருப்பதால் அவற்றுக்கு சந்தையில் கிராக்கி அதிகம். இந்நிலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மீன் வரத்து குறைந்துள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மீன் விலை அதிகரித்துள்ளது. 1 கிலோ முரல் ரூ.300-க்கு விற்றது தற்போது ரூ.400-க்கும், நண்டு ரூ.300-க்கு விற்கப்பட்டது ரூ.400-க்கும், விளை மீன் ரூ.250-க்கு விற்கப்பட்டது ரூ.350-க்கும், பாரை ரூ.300-க்கு விற்றது ரூ.450-க்கும் விற்பனை ஆனது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com