விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் பயனாளிகளை சேர்க்க ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் திங்கள்கிழமை (பிப்.25) முதல் 3 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தமீம்ராஜா கூறியது: ஆர்.எஸ். மங்கலம் வட்டார வேளாண் அலுவலகம் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் 3 நாள்கள் (பிப்.25, 26 மற்றும் 27) நடைபெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களது நிலத்துக்கான பட்டா ஆவணம் 10 (1), ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்க நகலுடன் நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை 04561- 241454 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். மேலும் பிரதான் மந்திரி சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகள் பயன்பெறும் விதமாக, ஆர். எஸ். மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேலை நாள்களிலும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


