மாவட்ட அதிமுக இளைஞரணி  துணைச் செயலர் நியமனம்

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலராக கமுதி சின்னாண்டு தேவன் என்ற கிருஷ்ணன்  சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலராக கமுதி சின்னாண்டு தேவன் என்ற கிருஷ்ணன்  சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 
       ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கான பதவியில்,  தற்போது ஏராளமானோர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் பொறுப்பில் 4-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணிச் செயலர் வின்சென்ட் ராஜா, மாவட்டச் செயலர் முனியசாமி ஆகியோரின் பரிந்துரையின்பேரில், கமுதியை அடுத்துள்ள அம்மன்பட்டியைச் சேர்ந்த சின்னாண்டுதேவன் என்ற கிருஷ்ணன்  மாவட்ட இளைஞரணி துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com