சுடச்சுட

  

  கமுதியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் கே.நவாஸ்கனி மற்றும் பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை தெரு முனை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    கமுதி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தாலுகா தலைவர் என்.போஸ் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் தங்கராஜ், விவசாய சங்க மாவட்டச் செயலர் கலைமைனி, இந்திய கம்யூனிஸ்ட் கமுதி தாலுகா செயலர் வி.குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  சிறப்பு அழைப்பாளராக  மாணவர் பெரு மன்ற ராமநாதபுரம் மாவட்டச் செயலர் எம்.எஸ்.காதர் கலந்து கொண்டு பேசினார். 
  கமுதி, முதுகுளத்தூர் வழியாக  தூத்துகுடி வரை ரயில் பாதை அமைந்திட மத சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். கமுதி விவசாய தாலுகா செயலர் செந்திவேல் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai