சுடச்சுட

  

  திருவாடானையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி  வேட்பாளர் வது.ந. ஆனந்துக்கு ஆதரவாக, நடிகர் செந்தில் சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார். 
  நடிகர் செந்தில்,  ஆர்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், திருவாடானை, தொண்டி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்றவாறு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.
  அப்போது அவர், மத்தியில் உள்ள பாஜக அரசு கடந்த தேர்தலின்போது, ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாகக் கூறினர். 
  ஆனால், இதுவரை தரவில்லை. மாநில அரசை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர். எனவே, இந்த 2 அரசுகளையும் வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டது.
   அனைவரும் அமமுக வேட்பராளர் ஆனந்துக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai