சுடச்சுட

  

  முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினருக்கான இரண்டாவது கட்ட தபால் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது.
  முதுகுளத்தூர்  சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காவல்துறையினருக்கு முதல் கட்டமாக கடந்த 10 ஆம் தேதி தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக திங்கள்கிழமை நடைபெற்ற தபால் வாக்குப்பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடலாடி, சாயல்குடி, கமுதி ஆகிய பகுதியில் இருந்து வந்த 179 காவல்துறையினர் தபால் வாக்குகளைப் பதிவு செய்தனர்.  சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சதீஷ் தலைமையில் இந்த வாக்கு பதிவு நடைபெற்றது.இதில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.  முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தி.ராஜேஸ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai